search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் பெண் படுகாயம்
    X

    விபத்து நடந்த சாலை பதட்டத்துடன் காணப்பட்டது.

    சாலை விபத்தில் பெண் படுகாயம்

    • இந்த சாலை அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியாகவே காணப்படும்.
    • போலீசார் சாலையை சீர்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோ ட்டை சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் ஒரு அரசு வங்கி மற்றும் தனியார் வங்கி மேலும் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் மற்றும் பல வகையான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசு மருத்துவமனை சாலையிலே வாகனங்கள் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி யாகவே இருந்து வருகிறது.

    பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீமுகி (வயது 30). இவர் பேராவூரணி அண்ணா சிலை அருகில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடையின் வேலையாக வங்கிக்கு சென்று வேலை யை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு புறப்படும் போது அரசு பேருந்து ஒன்று பட்டுக்கோ ட்டையிலிருந்து அந்த மருத்துவமனை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வங்கி மற்றும் தனியார் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தியிரு ந்ததால் ஸ்ரீ முகி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனுக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் ஸ்ரீமுகி படுகாயம் அடைந்தார்.

    இதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர் உடனே நிறுத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை மீட்டு தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவ ரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×