search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் கோர்ட்டு முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்
    X

    ஓமலூர் கோர்ட்டு முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்

    • ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறு மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார்.
    • ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கொங்கு பட்டி ஊராட்சி மூங்கிலேரிபட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மரகதம்(வயது 31).

    இவர் ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறூ மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்து அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து கண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது கணவர் பால்ராஜ் மூங்கிலேரிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரிடம் சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும் பணம் பெற்ற நாள் முதல் இது வரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். தொடர்ந்து ராமன் நாங்கள் குடியிருக்கும் வீட்டை எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டுகிறார்.

    இது குறித்து ஏற்கனவே சேலம் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்து விசாரணையில் உள்ளது. அடிக்கடி எங்களை மிரட்டுவதால் நாங்கள் தற்போது அங்கு இல்லாமல் தீவட்டிபட்டியில் உள்ள எனது தாய் வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார். எனவே இதுபற்றி நடவ–டிக்கை எடுக்க வேணும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×