என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
துடியலூர் அருகே தண்ணீர் வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
- கடந்த 1½ மாதங்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.
- 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சியில் பன்னீர்மடை கார்டன், சூர்யா கார்டன், வாரி கார்டன் என பல பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்மடை கார்டன், சூர்யா கார்டன், வாரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று காலை ஊராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடும் வரை ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடமாட்டோம் என கூறி கோஷங்களை எழுப்பியதுடன், ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.