search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி வாரச்சந்தையை மேம்படுத்த  ரூ.1.98 கோடியில் பணி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    X

    உடன்குடி வாரச்சந்தையை மேம்படுத்தும் பணியை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    உடன்குடி வாரச்சந்தையை மேம்படுத்த ரூ.1.98 கோடியில் பணி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    • உடன்குடி சந்தையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட் டத்தின் 2-வது மிகப்பெரிய வாரச்சந்தை உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில் தினசரி மக்கள் கூடும் இடத்தல் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் பொருட்களை வாங்கவும் திங்கள்கிழமை தோறும் இங்கு வருவார்கள்.

    இச்சந்தையில் வியபாரிகள், பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய உடன்குடி பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது

    இப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு உடன்குடிபேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார்.பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர்மால்ராஜேஷ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல்லை நாட்டி சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    வியாபாரிகள் சிறந்த முறையில் பொருட்களை விற்கும் வகையிலும், பொதுமக்கள் எந்தவித இடையூறுமின்றி பொருட்களை வாங்கக் கூடிய வகையிலும் மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்ககர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், பேரூராட்சி மன்ற நியமனக்குழு உறுப்பினர் ஜான் பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சலீம், தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில்பிள்ளை, ராம்குமார், தி.மு.க. மாவட்ட சார்பு ஆணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பைஸ், அஜய், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், ஓன்றிய மகளிரணி அமைப்பாளர் ராஜேஸ்வரி, குலசேகரன் பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கணேசன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நடராஜன், மாவட்டப் பிரதிநிதிமதன்ராஜ் மற்றும் முரளி, ஆனந்த், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×