search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் உழைக்கும் மகளிருக்கான மாநில மாநாடு
    X

    மாநாட்டில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


    திண்டுக்கல்லில் உழைக்கும் மகளிருக்கான மாநில மாநாடு

    • திண்டுக்கல்லில் உழைக்கும் மகளிருக்கான 6-வது மாநில மாநாடு நடைபெற்றது
    • மகளிருக்கு ஓய்வூதியம் வழங்க மாநாட்டில் தீர்மானம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இந்தியகட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் மாலதி தலைமை வகித்து பேசினார். பொதுச்செயலாளர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கன்வீனர் லூர்துரூபி, சிங்காரவேலு, குமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் மாலதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    உழைக்கும் மகளிருக்கு சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் வழங்கவேண்டும். மேலும் பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் மற்றும் மாதந்தோறும் ரூ.3ஆயிரம் வழங்கவேண்டும். மழைக்காலம் நிவாரணம் வழங்குவதோடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல மகப்பேறு காலத்தில் உழைக்கும் மகளிருக்கு விடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும்.

    பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழகத்தில் உள்ளூர் கட்டிட தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இதுகுறித்து அகிலஇந்திய தொழிலாளர் சம்மேளனம் நடவடிக்கை எடுக்க வலியுறத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×