search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக ரத்த கொடையாளர் தின முகாம்
    X

    உலக கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

    உலக ரத்த கொடையாளர் தின முகாம்

    • 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
    • ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா பிகேடி நர்சிங் ஹோமில் 'உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ராய்டிரஸ்ட் இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்திருந்தது.

    இதில் ஆக்சிஸ் வங்கி திருத்துறைப்பூண்டி கிளை, பி. கே. டி. நர்சிங் ஹோம், த.மு.மு.க திருத்துறைப்பூண்டி நகர ஒன்றியம், தமிழ்நாடு குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளர் நல சங்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருத்து றைப்பூண்டி கிளை, திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம், தமிழக அமைப்பு சாரா தெருவோர சுமை சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற் சங்கம் மற்றும் கிங்ஸ் இன்டிரியர் வுட் வோர்க்ஸ் முத்துப்பேட்டை போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தின.

    இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    நகர்மன்ற செயலாளர் கவிதா பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருத்துறைப்பூண்டி ஆக்சிஸ் வங்கி மேலாளர் பிரேம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    முன்னாள் நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாண்டியன் , திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீமான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    த.மு.மு.க ஒன்றிய செயலாளர் அன்சாரி, நகர தலைவர் இக்பால்ராஜா , நகர செயலாளர் நிஜாம், நகர பொருளர் முகமது யூசுப், நகர இளைஞரணி செயலாளர் பைசல், கடியாச்சேரி உறுப்பினர்கள் சாதிக் அலி மற்றும் அபுபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    அம்மாலு, அனுசியா தலைமையிலான ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி ஊழியர்கள் 7 பேர் தானமாக வழங்கப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர்.

    முடிவில் மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் செய்யது யூசுப் நன்றி கூறினார்.

    Next Story
    ×