என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக அறிவியல் தின விழா
- சுப்புராயலு, எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்படுத்தும் நன்மை, தீமைகளை பற்றி விளக்கங்கள் அளித்தார்.
- மாணவர்களின் அறிவியல் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மணிசங்கர் விளக்கி பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிரி வேதியியல் தலைவர் சுப்புராயலு, தமிழ் துறை பேராசிரியர் மணிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் சுப்புராயலு, நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள், நம் இளைஞர்கள் பயன் படுத்தும் உணவு, மருந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றால் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் நன்மை, தீமைகளை பற்றி உரிய அறிவியல் விளக்கங்கள் அளித்தார்.
மாணவர்களிடம் அறிவியலை நல் முறையில் பயன்படுத்தி அமைதி மற்றும் மேம்பாடு அடைதல் பற்றியும், இன்றைய உலகில் மக்களை வதைக்கும் சக்கரை நோய் மற்றும் மன அழுத்தம் ஏற்படுதல், அதிலிருந்து விடுபடுதல், இதற்கு நமக்கு அறிவியல் எவ்வாறு பயன்படுகிறது என்றும் விளக்கினார்.
மேலும் மணிசங்கர் நம் இலக்கியத்தில் காணப்படும் அறிவியல் கருத்துகளையும், அக்கருத்துக்களை சொல்ல கையாண்ட சொற்கள் நம்மிடையே மொழியால் ஏற்படும் அறிவியல் சிந்தனை களையும், திருக்குறள், பழமொழி மற்றும் பழம் பாடல்கள் ஆகியவை கூறும் நம் உணர்வு அறிவுக்கான இைணப்பை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது பற்றியும், மாணவர்களின் அறிவியல் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கி பேசினார்.
ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் ஆலோசனையின்பேரில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராஜேஸ்வரன் வழிகாட்டுதலின்படி முதலாம் ஆண்டு துறைத்தலைவர்கள் பேராசிரியர் ஆறுமுகம், கணேசன், அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அம்புஜராஜன் மற்றும் முதலாமாண்டு பேராசிரியர்கள் செய்திருந்தனர்.