என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதுமலையில் உலக புலிகள் தினம் கொண்டாட்டம்

- மனித விலங்கு ேமாதலை தடுப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
- உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.
ஊட்டி,
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் புலிகளின் முக்கியத்துவம், காடுகளின் பாதுகாப்பு மற்றும் மனித விலங்கு ேமாதலை தடுப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் பழங்குடியின மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரையிட்டு காணப்பட்டது.
தொடர்ந்து உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார். மேலும் அங்குள்ள மரங்களில் பைக்கஸ் மர தாவரங்கள் பதியும் பணியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார், தெப்பக்காடு வனசரக அலுவலர் மனோ ஜ்குமார், பழங்குடியினர் சூழல் மேம்பாட்டு குழுவின் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.