search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் நாளை கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சை மாவட்டத்தில் நாளை கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு- கலெக்டர் தகவல்

    • 30 நிமிடங்கள் ஆங்கில தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும்.
    • நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கடந்த 30-ந் தேதி நடைபெறவிருந்த கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது அந்த தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற உள்ளது. தேர்வர்கள், எழுத்துத் தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவல் மூலமாகவோ அல்லது https://agaram.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவெண் மற்றும் கைபேசி எண்ணினை உள்ளீடு செய்வதன் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அனுமதி சீட்டில் உள்ள குறிப்புகளைத் தவறாமல் பின்பற்ற தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு 30 மதிப்பெண்கள் கொண்டதாகும்.

    30 நிமிடங்கள் தமிழ் தேர்வும், 30 நிமிடங்கள் ஆங்கிலத் தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும். வாசித்தல் தேர்வானது நேர்முக தேர்வு நடைபெறும் நாளன்று நடைபெறும். வாசித்தல் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×