search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் 6-ந் தேதி நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு - 14 மையங்களில் நடக்கிறது
    X

    நெல்லையில் 6-ந் தேதி நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு - 14 மையங்களில் நடக்கிறது

    • அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது
    • தேர்வினை 14 மையங்களில் 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் 14 மையங்க ளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படுகிறது. இதனை 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர். பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப்பள்ளி, சாப்டர் பள்ளி உள்ளிட்ட 14 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    தேர்வுக்கு உரிய பணிகள் மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வின் நடவடிக்கை களை பதிவு செய்ய 15 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×