என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்கம்பியாளர் உதவியாளருக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
- தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது.
- விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஈரோடு:
தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது. இப்பணிக்கு தகுதியான 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள், தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாளர் தொழில் பிரிவில் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அடுத்த மாதம் 26-ந் தேதி மாலை 5:30 மணிக்குள், 'முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு –638009' என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை, 0424 2275244 என்ற எண்ணிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0424 2270044 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் அறியலாம்.