என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி அருகே ஆசிரியையிடம் நகை பறித்த வாலிபர் கைது
- சாரதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
- செயின் பறிப்பில் ஈடுபட்டது குலசேகரபட்டினத்தை சேர்ந்த பரத் என்பது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் சித்திரைபாபு. இவரது மனைவி சாரதா (வயது39). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
செயின் பறிப்பு
நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டி ருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வாலிபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாரதா கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். எனினும் அவர் தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தனிப்படை போலீ சார் மாணிக்கம், சாமுவேல், திருமணி, செந்தில், மகாலிங்கம் உள்ளிட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது குலசேகரபட்டினத்தை சேர்ந்த பரத்(வயது 20) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் மீது ஏராளமான வழிப்பறி புகார்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.






