என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி இளைஞர் பலி
    X

    ரெயில் மோதி இளைஞர் பலி

    • புத்தாண்டு கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.
    • ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொள்வர்.மேலும் தேவாலயங்கள் போன்றவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் அருகிலுள்ள ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் விக்கி என்கிற கணேசன் வயது 20.

    ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் திருவாரூர் ெரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடந்து ெரயில்வே காலணி பகுதிக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ெரயில் மோதியதில் சிறிதுரம் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கணேசன் உடல் சிதறி தண்டவாளத்திலேயே உயிரிழந்து கடந்துள்ளார்.

    அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ெரயிலின் டிரைவர் ெரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இளைஞர் எந்த ெரயில் மோதி உயிரிழந்தார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று ெரயில் மோதி இளைஞர் உடல் சிதறி பலியான சம்பவம் என்பது ெரயில்வே காலணி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×