என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் நடுரோட்டில் வாலிபருக்கு கத்திக்குத்து - ரவுடி உள்பட 2 பேர் கைது
- தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில்பிள்ளை விளையை சேர்ந்தவர் பிரவீன் குமாருக்கும், அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- மதன்குமார், செல்வம் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமார் தலையில் சரமாரியாக வெட்டினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில்பிள்ளை விளையை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது21). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிரவீன்குமார் மீதும் வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோவில்பிள்ளை விலையில் இருந்து அருகில் உள்ள வேலாயுதபுரத்தில் வசித்து வருகின்றார்.
கத்திக்குத்து
இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணராஜபுரம் சேதுபாதைரோடு, நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரவீன் குமார் வரும்போது, மற்றொரு வாகனத்தில் வந்த கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த மதன்குமார்(25), செல்வம் (26) ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமார் தலையில் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிரவீன்குமார் கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் கைது
இது குறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், ரத்தினவேல் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதன்குமார், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மதன்குமார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கங்களுடன் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் பெயர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.