என் மலர்
கதம்பம்
விந்தை உலகம்
- இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க.
- ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்.
பூமி இருக்கும் காலக்ஸியின் பெயர் பால்வீதி. பால்வீதியில் சுமாரா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வீதியின் நடுவே ஒரு கருந்துளை இருக்கு. ஒட்டுமொத்தமா இந்த லட்சம் கோடி நட்சத்திரங்களும் இந்த கருந்துளையை தான் சுத்தி வந்துகிட்டு இருக்கு.
நமக்கு அருகாமையில் அன்ட்ரோமிடான்னு இன்னொரு காலக்ஸி இருக்கு. அது பால்வீதியை விட பெரியதுன்னு சொல்றாங்க. இந்த காலஸிக்கள் எல்லாமே விண்வெளியில் எங்கோ போய்கிட்டே இருக்கு. எங்கே போகுதுன்னு யாருக்கும் தெரியாது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 21 லட்சம் கிமி வேகத்தில் காலக்ஸிகள் எங்கோ பயணம் பண்ணிகிட்டு இருக்கு.
இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க. ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஆக இன்னும் 500 கோடியாவது ஆண்டில் மனிதர்கள் இருக்காங்களோ இல்லையோ, ஏதோ உயிரினம் பூமியில் இருக்கும்.
தலா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ள இரு காலக்ஸிகள் மோதிக்கொண்டால் என்ன ஆகும்?
"பெருசா ஒன்றும் ஆகாது" என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஏனெனில் காலக்ஸிக்களின் நட்சத்திரங்களுக்கு இடையே இருப்பது பெரும்பாலும் வெற்றுவெளிதான். அதாவது ஒரு காலக்ஸியில் 99.2% வெறும் வெளிதான். மீதம் உள்ள 0.8% தான் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள்.
ஆக இந்த மோதல் நிகழ்கையில் விண்ணை பார்த்தால் திடீர் என வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். புதுசா ஏராளமான நட்சத்திரங்கள் விண்ணில் தோன்றும். சில நட்சத்திரங்கள் மோதி கிலோனோவா (Kilonova) எனும் வானவேடிக்கை நிகழலாம். பார்த்தால் ஒரே ஜாலியா இருக்கும்.
அப்ப நாம மனித வடிவில் இருக்கமாட்டோம். ஆனால் ஏதோ ஒரு வடிவில் இருந்து விண்ணை உற்றுபார்த்துக்கொண்டிருப்போம்.
ரோபாட் வடிவில் உட்கார்ந்து விண்ணைபார்த்துவிட்டு நோட்ஸ் எழுதிகிட்டு கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்?
- நியாண்டர் செல்வன்