என் மலர்
கதம்பம்

மூளை வளர்கிறதா?
- நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.
- மூளை வளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.
கல்லிலிருந்து வேண்டாத பகுதிகளை உளியால் வெட்டி நீக்கினால் அதில் கற்சிலை தோன்றுவதுபோல, மூளையிலிருந்து தேவையற்ற நரம்புச்செல்களைக் கவாத்துச் செய்வதன் மூலமே அறிந்தவை பதிவாகின்றன.
தினமும் புதிதுபுதிதாகப் பெயர்களை, காட்சிகளை, அனுபவங்களை நாம் பெறுந்தோறும் அவை மூளையில் புதிய நரம்புச் செல்சந்திப்புகளாக ஆக்கப்பட்டு நினைவுகளாகப் பதிகின்றன. அப்போது தேவையற்ற நரம்புச் செல்சந்திப்புகள் அகற்றவும் படுகின்றன. ஏனெனில் அறியாமை நீங்குவதுதானே அறிவு!
நமக்கு வாழ்நாள் முழுவதும் எவ்வளவு தேவையோ அதைவிடப் பலமடங்குக்கு அதிகமான நரம்புச்செல் இணைப்புகளுடன் நாம் பிறக்கிறோம். நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. மூளைவளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.
-பேரா.க.மணி
Next Story






