search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கொசு ஏன் கடிக்கிறது..?
    X

    கொசு ஏன் கடிக்கிறது..?

    • மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து...
    • மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!

    உங்க வூட்டிலே நாலு பேரு இருக்கீங்க. ஆனா ஒங்களை மட்டும் கொசு, உடாம தொரத்தித் தொரத்திக் கடிச்சுது'னா .... பிரச்சனைக் கொசுகிட்டே இல்லேங்க! உங்க கிட்டேதான் !

    நல்ல ரத்தம் ஓடுறவங்களை கொசு அதிகம் கடிக்காது.

    என்னமோ நான் புளுகற மாதிரி அப்படி ன்'னு பாக்கறீங்க ?

    உண்மைத்தானுங்க.

    ரத்தத்தை சுத்தமாக வச்சிக்க தேவையான காய்கறிகள் பழங்கள் சாப்பிடணும்.

    அதிகமான, சுத்தமில்லாத ரத்தத்தை சுத்திகரிக்கறத்துக்கு ... நம் உடல் அதிக ஆக்ஸிஜனை எடுத்துக்கும்.

    அதனால, வெளியே அனுப்பும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவும் அதிகமாக போய்த் தொலைக்கும்.

    அதுமட்டுமல்ல, இரத்தத்தை சுத்திகரிக்கறதுக்கோசரம் உடல் கூடுதல் வேலை செய்ய வேண்டி இருப்பதால், உடல் வெப்பமும் அதிகமா ஆயிடும்.

    இது எல்லாத்துக்கும் மூலக்காரணம் எது?

    அதிக அளவு அசுத்தமான ரத்தம் நம்ம உடலில் இருப்பதுதான்.

    ரத்தத்தை சுத்தம் பண்ணுற உறுப்பு சிறுநீரகம்.

    அதுல பிரச்சினை இருக்கவங்களை கொசு அதிகம் கடிக்கும்.

    "கெட்ட ரத்தம், கார்பன்-டை-ஆக்ஸைடு, அதிக வெப்பம் ... இப்பிடி நமக்கு பிடிச்சமான பதார்த்தங்களை ... தேடித் தேடி சேர்த்து வச்சிருக்கானே? இவேன் ரொம்ப நல்லவன்'டா" அப்பிடி நெனைச்சிக்கிட்ட கொசுவுக்கு நீங்கள் ஒரு favourite flavour ஆகி ... அதன் மனதுக்கு இனியவன் ஆகி விடுவீர்கள்.

    பிறகென்ன ...

    கொசுக்களுக்கெல்லாம் ...

    sweet எடு, கொண்டாடு.

    நாலு பேரு இருக்குற வீட்டுல உங்களை கொசு அதிகம் கடிச்சா உங்க சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சினை இருக்கு'னு தெரிஞ்சிக்கங்க.

    "கொசுக்களால் நோய் உருவாகிறது. டெங்கு'வும் அதனாலேயே உருவாகிறது. எனவே கொசுக்களை ஒழியுங்கள். டெங்கு அவதியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். "

    கொசு என்னா முந்தா நேத்திக்கி மொதோ நாள் ஊரில் இருந்து வந்திச்சா?

    மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து... மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!

    பருப்பு டப்பாவை மறந்து போயி பரண்'ல வச்சிட்டாக்க வண்டு வந்து மொச்சிடுது.

    செடியில இருக்கற வெண்டைக்காய் ... கொஞ்சம் ஏமாந்துச்சினா ... பூச்சி புடிச்சி போயிடுது.

    ஊறுகாயைக் கொஞ்சம் லேசு, பாசா ... கவனிக்காம உட்டோமுன்னா ... பூசனம் புடிச்சி போயிடுது.

    இதெல்லாம் இயற்கையின் நியதி.

    புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி.

    நம்ம உடம்புல கழிவு உருவாகுவது நியதி.

    அது பல நுண் உயிரிகளுக்கு உணவாக மாறுவது நியதி.

    புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி. இது மொதல்லேயே பார்த்தோமில்ல?

    நம்ம உடம்புல தேங்கற அழுக்கு ... கொசுவுல இருக்கற சிக்கன் குனியா வைரஸ்க்கு புடிச்சிது'னா ... கொஞ்சம் வைரஸ்ஸை ... உடம்புல உட்டுட்டு போயி அந்த உயிரியை வாழ வைக்குது; டெங்கு உயிரிக்கு புடிச்ச பக்குவத்துல அந்த கழிவு நம்ம உடம்புல இருந்தாக்க ... டெங்கு உயிரி பல்கி பெருகும்.

    ஈ'க்களுக்கு புடிச்ச வகையில் நம்ம கழிவுகள் இருந்திச்சி'னா ... அந்த கழிவு அல்வா'வை ஈக்களில் உள்ள ஃபுளூ உயிரிகள் வந்து ஒக்காந்து தின்னுட்டு அந்த ஜூரத்தைக் குடுத்துட்டு போயிடும்.

    ஆக, கொசுவோ, ஈயோ, எலியோ ... மெனக்கட்டு நோயைக் குடுத்துட்டு போறதில்லை. அதுங்களுக்கு சாதகமான சூழலை ... நம்ம உடம்புல உருவாக்கி குடுத்துட்டு ... என் வூட்டுல வந்து தங்கிக்கோ, தங்கிக்கோ'னு வருந்தி வருந்தி அழைத்து விட்டு... பின்னர் வாடுகிறோம்.

    காட்டில் வாழும் கோடூர மிருகங்கள் யாவை'னு ஒரு முயல் கிட்டே கேட்டாக்க அது சொல்லும்.

    சிங்கம், புலி, கரடி'னு.

    "அடப்போங்க நீங்க ஒன்னு ... இந்த சிங்கம், புலி, கரடி மூனும் ரொம்ப சாது ... அதுங்க பாட்டுக்கும் வரும், போகும் ... நம்மளை ஒன்னுமே பண்ணாது. ஆனா ரொம்ப கொடூரமான மூனு கேட்டீங்கன்னா ... இது கொக்கு, காக்கா, வாத்து!"

    இப்புடி சொல்றது யாருங்க?

    அதே காட்டில் வாழற புழுக்கள்தான் !

    ஆக நோய், உணவு, ஆபத்து ... போன்ற எதுவுமே எல்லோருக்கும் நிரந்தரமல்ல ... கால தேச வர்த்தமானங்களைப் பொருத்து, உயிரிகளைப் பொருத்து மாறுபடும்.

    -மானெக்‌ஷா

    Next Story
    ×