என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அதிகாரிகளை ஏமாற்றி கனடா செல்ல திட்டமிட்ட 10 பேர் கைது
- டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஏரோசிட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
- குடியுரிமை அதிகாரிகளை ஏமாற்றி டெல்லி விமான நிலையத்தில் இருந்து கனடாவுக்கு செல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
புதுடெல்லி:
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஏரோசிட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 10 பேர் அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்களை ஏஜெண்டு ஒருவர் கனடா அனுப்பி வைப்பதாகக்கூறி ஏமாற்றி விட்டதாகவும், இருந்தாலும் குடியுரிமை அதிகாரிகளை ஏமாற்றி டெல்லி விமான நிலையத்தில் இருந்து கனடாவுக்கு செல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மோசடி செய்யும் நோக்கில் இருந்ததாகக் கூறி போலீசார் 10 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
ரினாடு, மதன்ராஜ், நிதர்ஷன், பவித்திரன், விகிகரன், அஜித்குமார், சஞ்சய், கதுகுஷன், கிரிராஜ் (இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள்), மகேந்திர ராஜா (சென்னையைச்சேர்ந்தவர்). இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.