search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சலில் கடும் பனிப்பொழிவு- 14 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
    X

    இமாச்சலில் கடும் பனிப்பொழிவு- 14 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

    • மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும் உள்ளது.
    • மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன.

    இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 14 சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அடல் சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலிலிருந்து தர்ச்சா (தேசிய நெடுஞ்சாலை 3), தர்ச்சா முதல் ஷிங்குலா முதல் ஜாங்க்சார் வரை, கோக்சர் முதல் லோசார் (தேசிய நெடுஞ்சாலை 5) மற்றும் தண்டியிலிருந்து காது நுல்லா வரை சாலைகள் உள்ளன.

    மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும், மற்றவை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இரவுக்குள் மீட்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டது.

    போலீசார் மீட்பு பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு பிரேக் போட வேண்டாம் என்றும், சறுக்குவதைத் தவிர்க்க முதல் கியரில் நத்தை வேகத்தில் செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×