என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ரூ.3958 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்- குஜராத் முதலிடம்
- 5.39 கோடி லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு 814 கோடியாகும்.
- 1260.33 கோடி மதிப்பிலான தங்கள், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது
இந்தியா முழுவதும் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.8,889 கோடியை எட்டியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவற்றில் 45% போதைப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மதிப்பு ரூ.3958 கோடியாகும் .
அதிகபட்சமாகக் குஜராத்தில் ரூ.1187.80 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் ராஜஸ்தானில் ரூ.1133.82 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பஞ்சாப்பில் ரூ.734.54 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.8,889 கோடியில் ரூ.849.15 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. 5.39 கோடி லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.814 கோடியாகும்.
ரூ.1260.33 கோடி மதிப்பிலான தங்கள், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. ரூ.2006.56 கோடி பதிப்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்க இருந்த இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
75 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.