என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வெற்றி பெற்ற 543 எம்.பி.க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்
- தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சந்திர சேகர் பெம்மசானி 5,705 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
- 2-வதாக பாஜக எம்.பி. விஷ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4568 கோடி ரூபாய் ஆகும்.
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
பாஜக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 542 பேர் தேர்தல் களத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சூரத்தில பாஜக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
543 பேர் விரைவில் எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளனர். இந்த 543 எம்.பி.க்களில் 92 சதவீதம் பேர் அதாவது 504 எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள் என தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
5,705 கோடி ரூபாய்
இதில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சந்திர சேகர் பெம்மசானி 5,705 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவர் ஆந்திர பிரதேச மாநலிம் குண்டூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2-வதாக பாஜக எம்.பி. விஷ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் செவல்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4568 கோடி ரூபாய் ஆகும்.
3-வதாக பாஜக எம்.பி. நவீன் ஜிண்டால் உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1241 கோடி ரூபாய் ஆகும்.
2019-ம் ஆண்டு 475 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கும்போது கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2014-ல் 443 பேர் தேர்ந்தெடுக்குமபோது கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2009-ல் தேர்ந்தெடுக்கப்படும்போது 315 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். இதன் மூலம் தேர்தலுக்கு தேர்தல் தேர்ந்தெடுக்கப்படும் கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
திமுக எம்.பி.க்கள் 21 பேர்
பாஜக கட்சியை சேர்ந்த 240 எம்.பி.க்களில் 227 பேர் கோடீஸ்வர எம்.பி.க்கள். காங்கிரஸ் கட்சியின் 99 எம்.பி.க்களில் 92 பேர் கோடீஸ்வரர்கள். திமுக-வின் 22 எம்.பி.க்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 29 எம்.பி.க்களில் 27 பேர் கோடீஸ்வரர்கள்.
சமாஜ்வாதி கட்சியின் 37 எம்.பி.க்களில் 34 பேர் கோடீஸ்வரர்கள். வெற்றி பெற்ற ஆம் ஆத்மி (3), ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் (16) எம்.பி.க்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்