search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர்: ஆதித்யா தாக்கரே
    X

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர்: ஆதித்யா தாக்கரே

    • கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் எதிர்ப்பு அணி உருவாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்த சர்ச்சையால் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து சிவசேனா தொண்டர்கள் மத்தியில் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் எங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று பலர் எங்களிடம் கூறினார்கள், ஆனால் எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர். மே 20 அன்று, ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே வழங்கினார்.

    ஆனால் அவர் தற்போது நாடகம் நடத்தி சென்றுவிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்திக்கு சென்றுள்ளனர், அங்கு வெள்ளம் ஏற்பட்டு பலர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஆனந்தமாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களின் ஒரு நாள் சாப்பாட்டுக்கான செலவு ரூ. 9 லட்சம், இது பெரும் அவமானத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×