search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2 ஆண்டுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்தார் டெல்லி முன்னாள் அமைச்சர்
    X

    2 ஆண்டுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்தார் டெல்லி முன்னாள் அமைச்சர்

    • சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி ஆனது.
    • வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். அவர் தொடர்புடைய நிறுவனங்களில் பணமோசடி நடந்ததாக 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

    பிறகு 2022, மே 31-ம் தேதி பணமோசடி சட்டத்தின் கீழ், சத்யேந்திர ஜெயினை கைதுசெய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதற்கிடையே, 2023-ம் ஆண்டு மே மாதம் மருத்துவ காரணங்களுக்காக சத்யேந்திர ஜெயினுக்கு சுப்ரீம் கோர்ட் 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கியது. பிறகு அவர் நிரந்தர ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் திஹார் சிறைக்கு திரும்பினார்.

    டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    விசாரணையில் தாமதம், நீண்ட நாள் சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணை துவங்க நீண்ட நாட்களாகும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நிவாரணம் பெற தகுதி உடையவர்.

    பணமோசடி தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளில் தனிமனித சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டினார்.

    ரூ.50 ஆயிரத்திற்கான தனி நபர் ஜாமின் பத்திரம், அதே தொகைக்கு இரண்டு பேர் உத்தரவாதம் வழங்கவேண்டும். சாட்சிகளுடனோ, வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடனோ தொடர்பு கொள்ளக்கூடாது.

    விசாரணையில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்தக்கூடாது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என் நிபந்தனைகள் விதித்துள்ளது.

    ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியினரில் ஜாமின் கிடைத்த 3வது நபர் இவர் ஆவார். இதற்கு முன்னர் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோரும் ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×