search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல்: காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி போட்டி
    X

    தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல்: காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி போட்டி

    • தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேஷவ் ராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
    • செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் கேஷவ ராவ். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அபிஷேக் சிங்வியை வேட்பாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் தோல்வியை தழுவினார்.

    கேஷவ ராவ் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அபிஷேக் சிங்வி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதற்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.

    Next Story
    ×