என் மலர்tooltip icon

    இந்தியா

    WWE சண்டையாக மாறிய நகராட்சி கவுன்சில் கூட்டம்: வைரலாகும் காட்சி
    X

    WWE சண்டையாக மாறிய நகராட்சி கவுன்சில் கூட்டம்: வைரலாகும் காட்சி

    • 4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது.
    • எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி சேர்மன் முன்னிலையில் கவுன்சிலர்கள் மோதிக் கொண்டனர்.

    WWE மல்யுத்தம் போட்டியை பார்த்தீர்கள் என்றால் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வார்கள். பின்னர் சேர், பெஞ்ச் போன்றவற்றால் தாக்கிக் கொள்வார்கள். அதுபோன்ற சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் உள்ளது.

    4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடத்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் நகராட்சி சேர்மன் மற்றும் எம்.எல்.ஏ. பிரசான் சவுத்ரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென் அங்கிருந்தவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    மோதல் ஒரு கட்டத்தில கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒரவர் சேர்களை கொண்டு தாக்க தொடங்கினர். ஒருவர் சேர் மீது ஏறி மற்றொருவரை தாக்க முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோவை உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பா.ஜனதாவை கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

    "இந்த நிகழ்வு மாநில உள்ளூர் நிர்வாகத்தை பற்றி மட்டும் கேள்வி எழுப்பவில்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் உள்ள பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.

    எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படாத நிலையில், ஆய்வுக் கூட்டத்தில் வேறு என்ன நடந்திருக்கும். அதனால்தான் ஷாம்லியில் உள்ள கவுன்சிலர்களிடையே அடிதடி நடைபெற்றுள்ளது. பா.ஜனதா ஆட்சி கற்பிப்பது சொந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொண்டு ஆய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்பதுதான்" என்றார்.

    Next Story
    ×