search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    Akhilesh Yadav
    X

    அயோத்தி வன்கொடுமை: அகிலேஷ் கருத்துக்கு கொந்தளித்த அரசியல் தலைவர்கள்

    • சமஜ்வாதி கட்சியின் தலைவர் மொயித் கான் கைது.
    • இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்தனர்.


    சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் சமஜ்வாதி கட்சியின் தலைவரான மொயித் கானை ஜூலை 30 ஆம் தேதி கைது செய்தனர்.

    சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்தார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "தவறுகள் நடக்கும் போது, நீதியை பெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களிடனம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் யார் தவறு செய்தார்கள் என்று கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது."

    "யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். டிஎன்ஏ பரிசோதனையில் முடிவுகள் தலைகீழாக மாறினால், தவறு செய்த அரசு அதிகாரிகள் யாரும் தப்பிக்கக்கூடாது. இதுவே நீதிக்கான கோரிக்கை," என்று தெரிவித்தார்.

    அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அமித் மால்வியா, "குற்றம்சாட்டப்பட்டவர் முஸ்லீம் என்பதாலும், பாதிக்கப்பட்ட சிறுமி நிஷாத் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர்களை காப்பாற்ற இப்படி துடிக்கின்றனர்."

    "சமாஜ்வாடி கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சுரண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்தமுறை அநீதி எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படாது. நிச்சயம் தண்டனை வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.


    அகிலேஷ் யாதவ் கருத்துக்கு பதிலளித்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி, "அயோத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு மிக பொருத்தமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி கோரிக்கைக்கு நாம் என்ன செய்வது?"

    "அகிலேஷ் யாதவ் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை இதுபோன்ற டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதை சமாஜ்வாடி கட்சி தெளிவுப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்தார்.

    தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த பிரியண்க் கனோங்கோவும் அகிலேஷ் யாதவ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பான பதிவில் அவர், "மைனர் சிறுமி கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள், குற்றச்சாட்டு உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூறப்படுகிறது. ஆனால், நீங்கள் அவற்றை பாதுகாக்கின்றீர்கள். இந்த டிஎன்ஏ தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு "ஆண்கள் தவறு செய்வார்கள்," என்று கூறியது," என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×