search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஷாருக் - சல்மான் கான் சண்டையை நொடியில் தீர்த்துவைத்த பாபா சித்திக்.. கொல்லப்பட்ட NCP தலைவர் பின்னணி
    X

    ஷாருக் - சல்மான் கான் சண்டையை நொடியில் தீர்த்துவைத்த பாபா சித்திக்.. கொல்லப்பட்ட NCP தலைவர் பின்னணி

    • சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.
    • ஷாருக்- சல்மான் இடையே சண்டை ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். நேற்றைய தினம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.

    66 வயதான பாபா சித்திக் மகாராஷ்டிர அரசியலில் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக இருந்து வந்தவர். தனது இளமைக் காலம் முதல் 48 ஆண்டுகாலமாக காங்கிரசில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு மாறினார். 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி களிலும் இருந்துள்ளார்.

    காங்கிரசில் தன்னை சாப்பாட்டில் வாசனைக்காக போடும் இலையைப் போல அலட்சியமாக நடத்தியத்தாக அப்போது அவர் தெரிவித்திருந்தார். இவரது மகன் ஜீஸ்ஹான் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது அலுவலகத்துக்கு வெளியில் வைத்தே சித்திக் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜீஸ்ஹான் எம்.எல்.ஏ வாக இருக்கும் பாந்த்ரா தொகுதியில் சித்திக் பலகாலமாக எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் ஆவார்.

    கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்துவைத்ததால் சித்திக் பெரிதும் பேசப்பட்ட தலைவராக உள்ளார். அந்த சமயத்தில் ஷாருக் சல்மான் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது. எனவே வருடந்தோறும் பிரம்மாண்டமாக இஃப்தார் விருந்து நடந்தும் சித்திக் அந்த வருடம் ஷாருக் சல்மான் இருவரையும் விருதுக்கு அழைத்தார்.

    ஷாருக்கை சல்மான் கானின் தந்தை சலீம் கான் அருகே அமரவைத்தார். அதன்பின் சல்மான் கானை அவர்களருகில் அனுப்பி மனஸ்தாபத்தைத் தீர்த்து வைத்தார். இவ்வாறு மும்பையில் முக்கிய புள்ளியாக வளம் வந்த சித்திக் மகாராஷ்டிர தேர்தல் நெருக்கும் சமயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறனர்.

    Next Story
    ×