search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
    X

    காங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா

    • தாயகம் திரும்பிய வினேஷ் போகத்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தனது ரெயில்வே பணியை வினேஷ் போகத் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை இன்று ராஜினாமா செய்த வினேஷ் போகத், வடக்கு ரெயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என தெரிவித்தார்.


    Next Story
    ×