search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு 2.62 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
    X

    மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு 2.62 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

    • 2014-ம் ஆண்டு வாக்கில் ரெயில்வே பயன்பாட்டிற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
    • 2014-க்கு முன் 60 ஆண்டுகளில் 20 ஆயிரம் கி.மீட்டர் ரெயில்வே தடம்தான் மின்சாரம் வழித்தடமாக இருந்தது.

    மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறை பற்றி குறிப்பிடவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில் ரெயில்வே துறைக்கு 2,62,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு தொடர்பான பணியில் மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    1,08,795 கோடி ரூபாய் பாதுகாப்பு தொடர்பான செயல்பட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய தண்டவாளங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்படுவது, சிக்னல் சிஸ்டம் மேம்படுத்துதல் மேம்பாலங்கள் கட்டுவது, தண்டவாளத்திற்கு கீழ் பாதை அமைத்தல், கவாச் நிறுவுதல் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். கவாச் நிறுவுதல் முக்கிய பட்டியலில் முதலில் இடம் பெறும்.

    2014-ம் ஆண்டு வாக்கில் ரெயில்வே பயன்பாட்டிற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 2.62 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய நிலையை எட்டியுள்ளது.

    2014-க்கு முன் 60 ஆண்டுகளில் 20 ஆயிரம் கி.மீட்டர் ரெயில்வே தடம் மட்டும்தான் மின்சார தடமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுக்களில் 40 ஆயிரம் கி.மீட்டர் தடம் மின்சாரமாக்கப்பட்டுள்ளது. 2014-ல் சராசரியாக தினசரி 4 கி.மீட்டர் தூரம் புதிய தடத்திற்கான வேலை நடைபெற்றது.

    கடந்த நிதியாண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 14.5 கி.மீட்டர் வேலை நடைபெற்றது. நிதியாண்டு முழுவதும் 5300 கி.மீட்டர் புதிய தண்டவாளம் பணி நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×