search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நவராத்திரி கொண்டாடும் முன் கோமியம் குடிக்க வேண்டும்.. பகீர் கிளப்பிய பா.ஜக. நிர்வாகி
    X

    நவராத்திரி கொண்டாடும் முன் கோமியம் குடிக்க வேண்டும்.. பகீர் கிளப்பிய பா.ஜக. நிர்வாகி

    • உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்.
    • பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரி பண்டிகையின் போது கர்பா நடன கொண்டாட்டத்தில் அனுமதிக்கும் முன் இந்துக்களுக்கு கோமியம் கொடுக்க வேண்டும் என்று அமைப்பாளர்களை வலியுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கோமியம் குடிக்க செய்யும் முறை "ஆச்மான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை அறிவித்த பாஜக மாவட்டத் தலைவர் சிந்து வர்மா செய்தியாளர்களிடம் பேசும் போது, "சனாதன கலாச்சாரத்தில் ஆச்மன் நடைமுறைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. இதனால் அமைப்பாளர்களிடம் கர்பா பந்தல் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கும் முன் பக்தர்களுக்கு கோமியம் கொடுக்க அமைப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

    மேலும், "ஆதார் கார்டை எடிட் செய்யலாம். எனினும், ஒருவர் இந்து என்றால், அவர் கர்பா நடன பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள். உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    பசுக் காப்பகங்களின் அவலநிலை குறித்து பாஜக தலைவர்கள் மௌனம் சாதிப்பதாகவும், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்.

    "கோமியம் ஆச்சர்ய கோரிக்கையை எழுப்புவதன் மூலம் பா.ஜ.க. பிளவுப்படுத்தும் அரசியல் செய்வதற்கு புதிய தந்திரமாக கையில் எடுத்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க. தலைவர்கள் பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு கோமியத்தை உறிஞ்சி சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×