search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டாக்டர்களின் கோரிக்கைகளை ஏற்ற மம்தா பானர்ஜி: மேற்கு வங்க பாஜக சொல்வது என்ன?
    X

    டாக்டர்களின் கோரிக்கைகளை ஏற்ற மம்தா பானர்ஜி: மேற்கு வங்க பாஜக சொல்வது என்ன?

    • மேற்கு வங்க மக்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
    • மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

    ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட மூன்று நிபந்தனைகள் ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குவது தொடர்பான மம்தா பானர்ஜியின் முடிவு தொடர்பாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா முஜும்தார் கூறியதாவது:-

    ஜூனியர் டாக்டர்களின் சில நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்கமாட்டேன் எனத் தெரிவித்தார். மேற்கு வங்க மக்கள் நிபந்தனைகள் வைத்த நிலையில், அவர்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இது திட்டமிட்ட தோல்வி என்பது பாஜக-வுக்கு தெரியும். இதற்கு யாராவது ஒருவர் பொறுப்பு என்றால், அது போலீஸ் கமிஷனரோ, மற்ற ஒருவரோ அல்ல. முக்கியமான குற்றவாளி மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால்தான் பாஜக, மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

    மக்கள் விரும்பினால் ராஜினாமா செய்வதாக அவரே தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் வலியுறத்தலை நிறைவேற்றும் வகையில் பாஜக தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×