என் மலர்
இந்தியா
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழியின் பேச்சுக்கு பாஜக எம்.பி. சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்ஷன்
- தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கும் காரணத்திலேனாலேயே நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம்.
- எங்கள் அண்டை மாநிலமாக கேரளாவிற்கு இதே பிரச்சனை தான்
மத்திய அரசு, கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதி வழங்காமல் கையை விரித்துவிட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
இன்று மக்களவை பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "2014 முதல் 2020 வரை வெப்ப அலையால் இந்தியாவில் 5000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலையை மாநில பேரிடராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
மத்திய அரசு வழங்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் 30% நிதி மக்கள் தொகை மற்றும் மாநில பரப்பளவு அடைப்படையில் வழங்கப்படுகிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த தமிழ்நாடு அரசிற்கு இந்த விதிமுறைகள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இது நன்றாக படித்து நிறைய மதிப்பெண் வாங்கிய மாணவரை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைப்பதற்கு சமம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கும் காரணத்திலேனாலேயே நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். எங்கள் அண்டை மாநிலமாக கேரளாவிற்கு இதே பிரச்சனை தான்" என்று தெரிவித்தார்.
அப்போது கேரளாவை சேர்ந்த பாஜகவின் ஒரே ஒரு எம்.பி.யான சுரேஷ் கோபி கையை விரித்து காண்பித்தார்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி, "நீங்கள் கையை விரித்து காட்டுகிறீர்கள். அதே நிலைமைதான் கையை விரித்து விட்டார்கள். மத்திய அரசு நம்மை பார்த்து கைய விரிச்சிட்டாங்க" என்று தெரிவித்தார்.