என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பாஜகவின் 'ஊடுருவல்' பிரசாரம் படுதோல்வி - ஜார்க்கண்ட் ஹேமந்த் சோரன் கோட்டை - ஜேஎம்எம் பெருமிதம்
- ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா செயல்பட்டார்
- மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல்
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது. இதன்மூம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்துள்ளது.
பாஜக வியூகம்
இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு எதிராக பாஜக பெரிய அளவிலான தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைத்தது. பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹிமந்தா பிஸ்வா
பிரதமர் மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை பாதேங்கே தோ கதேங்கே [ஒன்றாக இருந்தால் வாழ்வோம் - பிரித்து இருந்தால் வெட்டப்படுவோம்] என்ற இந்துக்களை முன்னிறுத்தி கோஷம் எழுப்பினர். ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா முஸ்லிகள் எண்ணிக்கை அதிகரிப்பு என்ற ஒற்றை குற்றச்சாட்டை அம்மாநிலத்தில் பாஜகவின் பிரதான தேர்தல் வியூகமாக வகுத்து செயல்பட்டார். ஜேஎம்எம் முக்கிய தலைவர் சம்பாய் சோரன் பாஜக பக்கம் சென்றதும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
ஹேம்ந்த் சோரன்
ஆனால் பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது.
நில முறைகேடு தொடர்பான 2 வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் 6 மாதம் கழித்து விடுதலையானார். இடைப்பட்ட காலத்தில் அவரது மனைவி கல்பனா சோரன் கட்சியை வலுவோடு வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த தேர்தலில் பாஜக ஜார்கண்ட் மக்களிடையே தனது பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்துவதாகச் சோரன் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாஜகவின் வியூகங்களை உடைத்து ஹேமந்த் சோரனின் கட்சி தேர்தல் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் பாஜக முன்னிலையிலிருந்த நிலையில் சட்டென மாறிய நிலவரம் இந்தியா கூட்டணியை அபார வெற்றியை நோக்கி இட்டுச் சென்றுள்ளது.
How's the josh?
மொத்தம் உள்ள 81 இடங்களில் இந்தியா கூட்டணி 57 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.இதை கொண்டாடும் விதமாக ஜேஎம்எம்கட்சி கட்சி "How's the josh?" என்ற கேப்ஷனுடன் ஹேமந்த் சோரன் படத்தை பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.
How's the Josh? pic.twitter.com/uwGxOv46NV
— Jharkhand Mukti Morcha (@JmmJharkhand) November 23, 2024
"How's the josh?" என்பது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றி சொல்லாகப் பார்க்கப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட் வெளியான URI படத்தின் மூலம் இந்த சொல் டிரண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் என்றும் ஜேஎம்எம் கோட்டை என்பதை நிரூபித்ததாக அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்