search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மத்தியப் பிரதேச ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து.. 15 பேர் படுகாயம்
    X

    மத்தியப் பிரதேச ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து.. 15 பேர் படுகாயம்

    • கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
    • மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனம் இதை நடத்தி வருகிறது

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதத் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காலையில் தொழிற்சாலையின் எரிபொருள் நிரப்பும் பிரிவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆயுத தொழிற்சாலையானது மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×