search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதுகாப்புப்படை வீரர்கள் கால்நடை தடுப்பு வேலி அமைப்பதை தடுத்த வங்கதேச வீரர்கள்: எல்லையில் பதற்றம்
    X

    பாதுகாப்புப்படை வீரர்கள் கால்நடை தடுப்பு வேலி அமைப்பதை தடுத்த வங்கதேச வீரர்கள்: எல்லையில் பதற்றம்

    • கால்நடை தடுப்பு வேலி அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    • ஆட்சேபனை தெரிவித்ததால் வீரர்கள் வேலி அமைக்கும் பணியை கைவிட்டுள்ளனர்.

    இந்தியா- வங்கதேச நாடுகளின் எல்லை மேற்கு வங்க மாநிலத்தில் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து கிடக்கிறது. எல்லையில் இருநாட்டு பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையைிலான அரசு கவழிந்த பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இந்தியா- வங்கதேசம் எல்லை அமைந்துள்ளது கூச்பெஹாரில் கால்நடை தடுப்பு வேலி அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வங்கதேச எல்லை பாதுகாப்பு காவலர்கள் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் வீரர்கள் வேலை அமைக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதன்காரணமாக கூச்பெஹார் எல்லைப் பகுதியில் பதற்றமான நிலை நிலவுகிறது. இந்தியா எல்லையில் வேலி அமைக்கவில்லை. இந்திய எல்லைக்குள்தான் வேலை அமைக்கிறது. அதுவும் இரு நாட்டு ஒப்பந்தத்தின்படிதான் இந்த வேலை அமைக்கப்படுகிறது.

    இருந்தபோதிலும் வங்கதேச எல்லை காவலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் இருதரப்பு வீரர்கள் இடையே மோதல் ஏதும் ஏற்படவில்லை.

    அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு டைரக்டர் ஜெனரல்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அப்போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா-வங்கதேசம் எல்லை 4096 கி.மீ. நீளம் கொண்டது. எல்லை தொடர்பாக இந்தியா-வங்கதேசம் இடையில் வருடத்திற்கு இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடைபெறும். கடந்த மார்ச் 5-ந்தேதி வங்கதேசத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதுபோன்ற சம்பவம் இந்த வாரத்தில் 2-வது முறையாக நடைபெற்றுள்ளதாக பாதுகாப்புப்படை வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் இருந்து ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் அல்லது ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு வர முயற்சிக்கிறார்கள். இதனால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் எதிர்பாராத வகையில் வங்கதேசத்தின் கடல்பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களை விடுவிக்க வங்கதேச எல்லை காவலர்கள் மறுத்துவிட்டனர்.

    Next Story
    ×