என் மலர்tooltip icon

    இந்தியா

    சாதிவாரி கணக்கெடுப்பு சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும்: அகிலேஷ் யாதவ்
    X

    சாதிவாரி கணக்கெடுப்பு சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும்: அகிலேஷ் யாதவ்

    • எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொதெல்லாம் நாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
    • மைனாரிட்டிகளை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதிவாரி கணக்கெடுப்பு சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும். எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொதெல்லாம் நாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மைனாரிட்டிகளை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வருமானம் எவ்வளவு என்பது மத்திய அரசு வெளியிட வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக நமுது எல்லை சுருங்கிக் கொண்டு வருகிறது.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

    Next Story
    ×