என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இரண்டு வந்தே பாரத் ரெயில்கள் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்த முடிவு- மத்திய ரெயில்வே
- இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.
- சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
சிஎஸ்எம்டி- ஷீரடி சாய்நகர் வந்தே பாரத் ரெயில் தானே ஸ்டேஷனுக்கு காலை 6:49 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு புறப்படும். கல்யாண் ஸ்டேஷனுக்கு காலை 7:11 மணிக்கு நின்று, 7:13 மணிக்கு புறப்படும்.
ஷீரடி சாய்நகர்- சிஎஸ்எம்டி ரெயில் தானே இரவு 10:06க்கு வந்து 10:08க்கு புறப்படும். கல்யாண் நிலையத்தில் இந்த ரெயிலின் வருகை மற்றும் புறப்படும் நேரம் முறையே 9:45 மற்றும் 9:47 ஆகும்.
சிஎஸ்எம்டி- சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே ரெயில் நிலையத்திற்கு மாலை 4:33க்கு வந்து 4:35 க்கு புறப்படும். கல்யாண் மாலை 4:53க்கு சென்றடையும், 4:55க்கு புறப்படும் என்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சோலாப்பூர்- சிஎஸ்எம்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே நிலையத்திற்கு காலை 11:50 மணிக்கு வந்து 11:52 மணிக்கு புறப்படும்.
தானே மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த அரை-அதிவேக ரெயில்களில் ஏற தாதர் அல்லது சிஎஸ்எம்டிக்கு செல்ல வேண்டியிருப்பதால், இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.