என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அந்தமான் பகுதியில் 6 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்
- மீன் பிடி படகை சுற்றி வளைத்த, கடற்படையினர் படகில் சோதனை செய்தனர்.
- வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது, இதேபோன்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அந்தமான் கடற்பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அந்தமான் கடற்பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீன்பிடி படகு ஒன்றில், போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.
அந்த மீன் பிடி படகை சுற்றி வளைத்த, கடற்படையினர் படகில் சோதனை செய்தனர். அப்போது 2 கிலோ எடை கொண்ட சுமார் 3 ஆயிரம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 டன் எடை கொண்ட போதைப்பொருட்களையும் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்திய கடற்படை பறிமுதல் செய்த போதைப்பொருட்களில் இதுவே மிக அதிகபட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது;-
"பறிமுதல் செய்யப்பட்டுள்ள 6 டன் போதைப்பொருட்களும் இந்தியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது." என்றார்.
அந்தமான் நிக்கோபார் தீவை ஒட்டிய கடற்பகுதியில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்படுவது இது முதல் முறையல்ல. 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது, இதேபோன்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் குஜராத் கடற்பரப்பில் சுமார் 700 கிலோ போதைப்பொருளை கடற்படை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.