என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
'பாரபட்சமான பட்ஜெட்': நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் காங்கிரஸ் முதல்வர்கள்
- நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- ஜூலை 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இத்தனை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், "தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பாரபட்சமானது, மிகவும் ஆபத்தானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
அதன்படி கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டி, இமலாசப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள்.
மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.