search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி முடிவை வரவேற்ற ஆனி ராஜா
    X

    வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி முடிவை வரவேற்ற ஆனி ராஜா

    • வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிட இருக்கிறார்.
    • காங்கிரஸ் பெண் ஒருவரை நிறுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது- ஆனி ராஜா

    கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டபோது, கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா அங்கு போட்டியிட இருக்கிறார். இதனால் ராகுல் காந்தி போட்டியிடக் கூடாது என வெளிப்படையாக விமர்சனம் வைக்கப்பட்டது.

    ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அதேவேளையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அங்கேயும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் இன்று இரவு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதேவேளையில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி. பதவியை தக்கவைத்துக் கொள்ளும் அவரது முடிவை வரவேற்பதாக ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தியை போன்ற முக்கியமான தலைவர்கள் இந்தி பேசும் முக்கியமான மாநிலத்தில் பணியாற்றுவது முக்கியமானது. ஆகவே அவர் எடுத்த இந்த முடிவில் தவறு இல்லை. நான் இதை வரவேற்கிறேன்.

    இடைத்தேர்தலில் பெண் ஒருவரை நிறுத்துவதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறையை விட தற்போது பெண்கள் சதவீதம் மக்களவை எம்.பி. எண்ணிக்கையில் குறைவாக உள்ளது. ஆகவே, அதிகமான பெண்கள் வருவதை விரும்புகிறேன்.

    இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    பிரியங்கா காந்தி பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி, இடது சாரி கூட்டணி தனித்தனியாக போட்டியிடுவதாக இந்தியா கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏதாவது மாற்றம் என்றால் அது இந்தியா கூட்டணியை உருவாக்கிய, அதில் உள்ள கட்சிகளால் மட்டுமே முடியும்.

    Next Story
    ×