என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. இப்படி செய்வது வழக்கம்தான் - அகிலேஷ் யாதவ்
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக 5-மாநில தேர்தல்கள் கருதப்படுகிறது
- ரூ.500 கோடிக்கு மேல் பூபேஷ் பாகேல் பெற்றதாக அமலாக்க துறை கண்டுபிடித்தது
இம்மாத இறுதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களுக்கான முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல்களை அரசியல் கட்சிகள் முன்னோட்டமாக கருதுவதால் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஒரு புறமும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறுபுறமும் இந்த 5 மாநிலங்களிலும் வெல்வதற்கு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சத்தீஸ்கரில், "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" எனும் மென்பொருள் செயலியை உருவாக்கி, அதன் மூலம் மக்களை பெருமளவு பணம் இழக்க செய்து லாபம் சம்பாதித்த அந்நிறுவனர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் பணம் கொடுத்திருப்பதாகவும், இதை அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
சத்தீஸ்கரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகேலின் ஆட்சி நடைபெறுகிறது.
இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்து, அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. இவ்வாறு பிரச்சாரம் செய்வதாக கூறியது.
இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக ஊழல் குற்றச்சாட்டை வைப்பது பா.ஜ.க.விற்கு வழக்கமாகி வருகிறது. எதிர்கட்சிகளை அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் துன்புறுத்துவதும் வழக்கம். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வை பதவியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்" என தெரிவித்தார்.