என் மலர்
இந்தியா

மரண தண்டனை ரத்தாகி வெளியே வந்த சீரியல் ரேப்பிஸ்ட்.. மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

- கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வந்த ரமேஷ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
- பொக்சோ வழக்கில் ரமேஷ் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
நர்சிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குடிசையில் வசித்து வந்த சிறுமி, பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போனாள். மறுநாள் ஒரு காட்டில் பலத்த காயமடைந்த நிலையில் அவள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நரசிங்கர் துணைப்பிரிவு காவல் அதிகாரி உபேந்திர பாட்டி கூறுகையில், சிறுமிக்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தது. முதலில் நரசிங்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கும் சிறுமி கொண்டுசெல்லப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள்.
இதனையடுத்து அப்பகுதியில் 46 இடங்களில் உள்ள 136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ரமேஷ் சிங் என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்று தெரிந்ததை கண்டுபிடித்தனர்.
ரமேஷ் சிங் என்பவர் கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வருவதை அறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷ் சிங்கின் பின்னணியை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
2003 ஆம் ஆண்டு ஷாஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
பின்னர் 2013 ல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ரமேஷ் சிங், 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த கையேடு வெளியே வந்த ரமேஷ் சிங் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.