search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
    X

    டெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

    • டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

    டெல்லியில் வரும் 2025-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

    இதில், முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சத்தர்பூர் தொகுதியில் பிரஹ்ம் சிங்தன்வார் போட்டியிடுகிறார். தொடர்ந்து, பதார்பூர் தொகுதியில் ராம் சிங் நேதாஜி, லட்சுமி நகர் தொகுதியில் பிபி தியாகி, சீலாம்பூர் தொகுதியில் சவுதிரி சுபாயிர் அகமது, சீமா புரி தொகுதியில் வீர் சிங் திங்கன், ரோஹ்டாஸ் நகர் தொகுதியில் சரிதா சிங், கோண்டா தொகுதியில் கவுரவ் சர்மா, விஷ்வாஸ் நகர் தொகுதியில் தீபக் ஷிங்லா, கரவால் நகர் தொகுதியில் மனோஜ் தியாகி, கிராரி தொகுதியில் அனில் ஜா, மாடியாலா தொகுதியில் சுமேஷ் ஷோகீன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


    Next Story
    ×