என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தாகத்திற்கு தண்ணீர் கேட்பது நமது கலாசாரம்: அதிஷி போராட்டம் பெற்றி பெறும்- கெஜ்ரிவால்
- டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
- பலமுறை கேட்டும் அரியானா அரசு தண்ணீர் திறக்க மறுத்து விட்டது.
டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. டெல்லிக்கு அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போதைய நிலையில் அரியானா வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என டெல்லி மாநில அரசு எவ்வளவு போராடியும் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், முக்கிய மந்திரியாக திகழும் அதிஷி அரியானா மாநிலத்திடம் கூடுதல் தண்ணீர் கேட்டு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதிஷியின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அனுப்பியதாக சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும், கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களின் அவலம் வலியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தாகத்திற்கு தண்ணீர் வழங்குவது நமது கலாசாரம். டெல்லி அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெறுகிறது. இந்த கடுமையான நேரத்தில் அரியானா தண்ணீர் வழங்கும் என நம்பினோம். ஆனால், டெல்லியின் தண்ணீர் பங்கை அரியானா குறைத்துள்ளது என்றார்.