என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
2 ஆண்டில் 4 ஆயிரம் இறுதிச்சடங்கு: இளம்பெண்ணுக்கு குவியும் பாராட்டு
- இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டாக அனாதையாக இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்துவருகிறார்.
- டெல்லியில் இதுவரை சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியைச் சேர்ந்தவர் பூஜா ஷர்மா. இவர் ஷாஹ்தரா பகுதியில் வசித்து வருகிறார். மருத்துவமனைகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் பல உடல்களுக்கு பூஜா ஷர்மா இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பம் அல்லது உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளேன்.
30 வயதான எனது மூத்த சகோதரர் ஒரு சிறிய சண்டையில் என் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் என் தந்தை கோமா நிலைக்குச் சென்றார். தனது சகோதரனுக்கான இறுதிச்சடங்குகளை நானே செய்தேன். அப்போதிருந்து இந்த சேவையை செய்துவருகிறேன்.
ஆரம்பத்தில் குடும்பங்கள் அல்லது இருப்பிடம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற நான் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டேன். அதன்பின் இப்போது காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகள், உரிமை கோரப்படாத உடல்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்கின்றன.
இறுதிச்சடங்குகள் செய்ய சுமார் 1,000 முதல் 1,200 ரூபாய் வரை ஆகும். நான் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் தங்கியிருக்கிறேன். எனது தந்தை கோமாவில் இருந்து விடுபட்டு தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராகப் பணிபுரிகிறார். எனது தாத்தாவின் ஓய்வூதியத்தில் நான் இவற்றை செய்து வருகிறேன்.
இந்தப் பணிகளை செய்வதற்காக பல சவால்களை எதிர்கொண்டு வருகிறேன். நான் செய்யும் வேலையை பலர் தடையாகப் பார்க்கிறார்கள். என்னைச் சந்திக்க விடாமல் என் நண்பர்களை அவர்களின் குடும்பத்தினர் தடுக்கின்றனர். இந்தப் பணிகளைச் செய்வதால் எனது திருமணத்திற்கும் பல தடைகள் வருகின்றன என தெரிவித்தார்.
உரிமை கோரப்படாத உடல்களுக்கு ஒரு பணியாக தன் சொந்த செலவில் மனமுவந்து இறுதிச்சடங்கு செய்து வரும் இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்