search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா: வெளியுறவு மந்திரி  ஜெய்சங்கர் பங்கேற்கிறார்
    X

    டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார்

    • அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
    • அதிபர் ஜோ பைடன் விழாவில் பங்கேற்று அதிகாரத்தை ஒப்படைப்பார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    பதவிக் காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன் விழாவில் கலந்துகொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு டிரம்ப் உரையாற்றுவார். இந்த விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இதற்கிடையே, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    பதவியேற்பு விழா முடிந்ததும் புது நிர்வாகத்தினரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×