search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு- டெல்லியில் நாளை தொடக்கம்
    X

    (கோப்பு படம்)

    இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு- டெல்லியில் நாளை தொடக்கம்

    • தேர்தலில் நேர்மையை உறுதி செய்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
    • 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார்.

    உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள், யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், சிலி, கிரீஸ், பிலிப்பைன்ஸ் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் டெல்லியில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களை சேர்ந்த பிரநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் முதல் இரண்டு அமர்வுகள் தேர்தல் நேர்மையை உறுதி செய்வது மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    Next Story
    ×