என் மலர்tooltip icon

    இந்தியா

    EPIC நம்பர் விவகாரம்: தேர்தல் ஆணையம் இறுதியாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளது- திரிணாமுல் காங்கிரஸ்
    X

    EPIC நம்பர் விவகாரம்: தேர்தல் ஆணையம் இறுதியாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளது- திரிணாமுல் காங்கிரஸ்

    • வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே எபிக் நம்பர்.
    • இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்திய தேர்தலை ஆணையம் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} வழங்கியுள்ளது.

    ஆனால் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே எபிக் நம்பர் இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியானது. உதாரணத்திற்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு வாக்களரின் அடையாள எண்ணும், கர்நாடக மாநிலத்தில் உள்ள வாக்காளரின் அடையாள எண்ணும் ஒரே மாதிரியாக இருக்கும். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் கடைசியாக ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சகேத் கோகலே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சாகேத் கோகலே கூறியிருப்பதாவது:-

    ஒரே எண் கொண்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பலருக்கு வழங்கப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் இறுதியாக ஏற்றுக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது. மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் பொய்யை வெளிக்கொண்டு வந்து அதன் ஊழலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

    முதலில் மறுப்பு தெரிவித்த ஆணையம், தற்போது அதை 3 மாதங்களில் சரி செய்வதாக தெரிவித்துள்ளது. ரிஜிஸ்டர் அதிகாரிகள் தவறான சீரிஸ் எண்களை பயன்படுத்தியதால் கடந்த 2000-த்தில் இருந்து இது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம்.

    தேர்தல் ஆணையம் எதை மறைக்கிறது? யாரைப் பாதுகாக்க முயற்சிக்கிறது? இது ஒரு மோசடி. பதில்கள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×