என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை
Byமாலை மலர்25 Jun 2024 3:13 PM IST
- விசாரணை நீதிமன்றம் கடந்த 20-ந்தேதி ஜாமின் வழங்கியது.
- ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமினை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தது. நீதிமன்றம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தியது.
அப்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்தது. அத்துடன் விசாரணைக்கு இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான பெஞ்ச், விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு தடைவிதித்தது.
Next Story
×