என் மலர்
இந்தியா
ஆம் ஆத்மியை பேரழிவு என பிரதமர் விமர்சிப்பது நல்ல நகைச்சுவை- டெல்லி மந்திரி பதிலடி
- டெல்லிக்காக மத்திய அரசு செய்தது என்ன? என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.
- தொழில் அதிபர்கள் மிரட்டப்பட்டனர். மக்கள் பட்டப்பகலில் கொல்லப்பட்டனர். இதற்கு பாஜக அரசுதான் பொறுப்பு.
டெல்லி மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியை பிரதமர் மோடி டெல்லிக்கான பேரழிவு (AApada) என விமர்சித்தார். மேலும், "நாம் பேரழிவை பொறுத்துக் கொள்ள முடியாது. நாம் அதை நீக்கும்வோம்" என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி ஆம் ஆத்மியை விமர்சிப்பதை சிரிப்பது போல் உணர்கிறேன் என டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:-
இதுபோன்ற அறிக்கைகள் (கருத்துகள், விமர்சனங்கள்) பிரதமருக்கு பொருந்தாது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு டெல்லியை பாதியளவு கொண்டுள்ளது. நாங்கள் பாதியளவு கொண்டுள்ளோம். நாங்கள் கழிவுநீர் சிஸ்டம், தண்ணீர் விநியோகம், மின்சாரம் ஆகிய துறைகளை முன்னேற்ற பணிகள் செய்துள்ளோம்.
டெல்லிக்காக மத்திய அரசு செய்தது என்ன? என்பதை நான் கேட்க விரும்புகிறேன். தொழில் அதிபர்கள் மிரட்டப்பட்டனர். மக்கள் பட்டப்பகலில் கொல்லப்பட்டனர். டெல்லியில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இதற்கெல்லாம் பாஜக-வின் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
டெல்லியில் உள்ள கல்வி முறை பற்றி பிரதமர் மோடி பேசியதை நான் சிரிப்பது போல் உணர்கிறேன். இன்று உலகின் மிகப்பெரிய நபர்கள் எல்லாம் டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்க்க வருகின்றன. நானும் பிரதமர் மோடியை அழைக்கிறேன். முதலில் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை பாருங்கள். அதற்குப் பிறகு வேலை நடந்துள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்யுங்கள். மிகப்பெரிய மேடையில் இருந்து இதுபோன்று பேசுவது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு சவுரப் பரத்வாஜ் பதில் அளித்துள்ளார்.